181
தலைநகர் கொழும்பில் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாத ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளது. மீதொட்டுமுல்ல குப்பைகூளம் நேற்றைய தினம் சரிந்து பேரனர்த்தம் ஏற்பட்டிருந்தது. இந்த அனர்த்தம் காரணமாக 10 பேர் வரையில் உயிரிழந்திருந்தனர்.
எனவே, குப்பைகளை கொட்டுவதற்கு பொருத்தமான இடம் எதுவும் இல்லாத காரணத்தினால், பெரும் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது. குப்பைகளை கொட்டுவதற்கு துரித கதியில் ஓர் இடம் ஒதுக்கப்படாவிட்டால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love