கிளிநொச்சியில் ஊடக கலை கலாச்சார அமையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (15-04-2017) சர்வமத பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றிவரும் முழுநேர மற்றும் பகுதி நேர ஊடகவியலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலும் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வகையிலும் புதிதாக உருவாக்கப்பட்ட ஊடக கலை கலாச்சார அமையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (15-04-2017) பகல் 10.00 மணிக்கு சர்வமத பிரார்த்னைகளுடன் கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான வே.கஜன் தலைமையில் நடைபெற்ற ஆரம்பநிகழ்வில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் குரு பங்குத்தந்தை மௌலவி ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வகையிலும் நாட்டின் பல பாகங்களிலும் உரிமைக்காக போராடுகின்ற ஊடக அமைப்புக்களுடன் ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வகையிலும் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த அமையத்தின் புதிய நிர்வாக தெரிவு அண்மையில் கிளநொச்சி கனகபுரம் வீயில் அமைந்துள்ள பாரதி கோட்டலில் நடைபெற்றுள்ளது.
இதில் தலைவராக மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான வே.கஜன் அவர்களும் செயலாளராக ஊடகவியலாளர் க.ரவீந்திரராசா அவர்களும் பொருளாளராக ஊடகவியலாளர் அருள் ஜோன்சன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது