178
மீதொட்டுமுல்ல பகுதியில் இனி குப்பைகள் கொட்டப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். தற்காலிக அடிப்படையில் குப்பைகள் சில இடங்களில் கொட்டப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு பல தடவைகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் மக்கள் அதனை உதாசீனம் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அனர்த்தம் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இடம் நகர்வதற்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love