199
மத நம்பிக்கை கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இலங்கையில் கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 99 வீதமானவர்கள் தாங்கள் மத நம்பிக்கையுடையவர்கள் என தெரிவித்துள்ளனர். இலங்கை, எதியோபியா, மலாவி, நைகர் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளின் மக்கள் உலகில் அதிகளவு மத நம்பிக்கைக் கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மத நம்பிக்கை மிகவும் குறைந்த மக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் சீனா முன்னணி வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love