மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளது. பாதிக்கப்பட்ட இந்தப் பிரதேச மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்த விசேட செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த அனர்த்தம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜப்பான் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு வர உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.