168
இலங்கையின் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 3 மின்உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக பல பிரதேசங்களில் மின்சார தடை ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில் தற்போது இந்த பிரச்சினை சீர் செய்யப்பட்டு மின் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Spread the love