காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் எந்தவித பதிலையும் அரசாங்கம் வழங்காத நிலையில் 57வது நாளாகவும் தொடர்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகள் தொடர்பில் நல்லாட்சி அரசு ஆட்சியமைத்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும் தங்களது உறவுகள் தொடர்பில் இதுவரை எந்த பதில்களையும் தரவில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தங்களது உறவுகளைத் தடுத்து வைத்துள்ள மறைமுக தடுப்பு முகாம்களை பார்வையிட அனுமதிக்கவேண்டும், தங்களது உறவுகள் தொடர்பில் உரிய பதிலை வழங்க வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (17-04-2017) 57வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.