232
பலஸ்தீன கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடிப்படை உரிமைகளை வழங்குமாறு கோரி இவ்வாறு கைதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் ஆயிரத்து ஐநூறு பலஸ்தீன அரசியல் கைதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் அடிப்படை மனிதாபிமான வசதிகள் கூட கிடையாது என் குற்றம் சுமத்தியுள்ள பலஸ்தீன கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் மூலமே தமது கோரிக்கைகளை வெற்றிகொள்ள முடியும் என் தெரிவித்துள்ளனர்.
Spread the love