ராணுவ ஜீப்பில் இளைஞரைக் கட்டி வைத்து மனித கேடயம் போல் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக காஷ்மீர் ராணுவப் பிரிவு மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காஷ்மீர் தலைநகரில் இடம்பெற்ற டைத்தேர்தலின் போது தேர்தலை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் கலவரத் தில் ஈடுபட்டனர். வாக்குச் சாவடி களைத் தீ வைத்து கொளுத்தியதுடன் பல பாதுகாப்புப் படையினர் மீது; கல்வீச்சும் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 8 பேர் பலியாயினர். இந்நிலையில்இ தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ராணுவத்தினர் ஒரு இளைஞரைப் பிடித்து ஜீப்பில் கட்டி வைத்துஇ மனித கேடயமாகப் பயன்படுத்திய வீடியோ வெளியானது. இந்நிலையில்இ ஜீப்பில் இளைஞரைக் கட்டி வைத்தது தொடர்பாக காஷ்மீர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காஷ்மீருக்கென உள்ள ரன்பீர் குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி ராணுவப் பிரிவு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.