ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற சவுதி உலங்குவானூர்தி ஒன்று விழுந்து நொரு ங்கியதில் 12 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏமன் நாட்டில் அரசுக்கெதிராக ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆயுத போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சனா நகரின் கிழக்கில் உள்ள மாரிப் மாகாணத்தில் சவுதி கூட்டுப் படையின் உலங்குவானுர்தி ஒன்று இன்று தாக்குதல் நடத்துவதற்காக சென்ற வேளை அது திடீரென தரையை நோக்கி விழுந்து நொருங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது உலங்குவானுர்தியில் பயணம் செய்த 5 அதிகாரிகள் உள்பட 12 சவுதி படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என சவுதி கூட்டுப்படை தகவல் வெளியிட்டுள்ளது.