153
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு செல்ல உள்ளார். இந்த மாத இறுதிப் பகுதியில் பிரதமர் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் மே மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் செய்வதற்கு முன்னதாக பிரதமர் இந்தியாவிற்கு செல்ல உள்ளார்.
2015ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க மூன்றாவது தடவையாக இந்தியாவிற்கு பயணம் செய்ய உள்ளார். எட்கா உடன்படிக்கையை இறுதியாக்குவது குறித்து இந்த பயணத்தின் போது பிரதான கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love