இந்திய பிரதமர் மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் நேற்றையதினம் டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். நேற்று முன்தினம் இந்தியா சென்ற அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் மாஸ்டர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன்போது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோரும் உடனிருந்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது தெற்காசிய பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அவருடைய நிர்வாகத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.