முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ சீனப் புலமைப் பரிசிலை நிராகரிக்கக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன புலமைப் பரிசிலை பெற்றுக் கொண்டு சீனாவில் சென்று கல்வி கற்பதா இல்லையா என்பதனை இன்னும் கோதபாய ராஜபக்ஸ தீர்மானிக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
ஓராண்டு காலம் சீனாவில் தங்கியிருந்து கல்வி கற்க வேண்டும் என்பதனால் அவர் இவ்வாறு தீர்மானித்துள்ளார் எனவும் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல விருப்பமில்லாத காரணத்தினால் அவர் இவ்வாறு தீர்மானித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புலமைப் பரிசில் ஒன்றை பெற்றுக் கொண்டு சிங்கப்பூரில் கல்வி கற்றும் வரும் கோதபாய இந்த மாத இறுதியில் நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.