169
இலங்கைக்கான பயணத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்துள்ளார். ஐக்கியநாடுகள் அமைப்பின் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் அவர் இலங்கைக்கு வர உள்ளார். பிரதமர் மோடி, இரண்டாவது தடவையாகவும் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளதாக நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி முதல் 14ம் திகதி வரையில் வெசாக் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. கடந்த 2015ம் ஆண்டில் இதற்கு முன்னதாக மோசடி இலங்கைக்கு பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love