கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, எம்ஏ சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிறிதரன். மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் சாமந்தி வீரசிங்க மற்றும் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரிகள் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன் போது ஊடகவியலாளர்கள் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் சில நிமிடங்கள் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கபட்டனர். இந்தக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்