இலங்கை மிகவும் வலுவான பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் முன்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும், ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் வெளிநாட்டு இருப்புக்கள் ஏற்கனவே 5 பில்லியன் டொலர்களை கடந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன்மூலம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பட்டியல்படுத்தி தனிச் சபையின் கீழ் நிர்வகிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இன்னும் இரண்டு வார காலத்தில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி இதன்போது பல புதிய முகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.