183
யுத்தம் காரணமாகவே குப்பை மேட்டை அகற்ற கால தாமதம் ஏற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அகற்றுவதற்கு காலம் தாமதிக்கப்பட்டதற்கு யுத்தமே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதரபும் ஸ்ரீமஹாபோதி விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமது ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் இது தொடர்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த திட்டத்தை அமுல்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love