153
ராஜபக்ஸக்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதே தமது நோக்கமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தற்போதைய அரசாங்க அமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு நடவடிக்கை எடுக்காமை அதிருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love