கமரூனில் ஊடகவியலாளர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போகோ ஹாராம் தீவிரவாத இயக்கம் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட அஹமட் அபா என்ற ஊடகவியலாளரே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய அபாயத்தை எதிநோக்கி வருகின்றார்.
கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அபா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அஹமட் அபா றேடியோ பிரான்ஸ் என்ற ஊடகத்தின் சார்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஹமட்டுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் அஹமட் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. அஹமட் அபா மீது பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.