அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள மிகவும் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இரண்டு கனேடியர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. Farah Mohamed Shirdon மற்றும் Tarek Sakr ஆகிய கனேடியேர்களே இவ்வாறு பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் சார்பில் பாரா மொஹமட் நிதி திரட்டியதாகவும், அல்கய்தாவுடன் தொடர்புடைய அல் நுஸ்ரா என்ற இயக்கத்திற்கு தாரெக் ஸ்னைப்பர் பயிற்சிகளை வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிரியாவில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய கனேடியர்களின் பெயர்களை அமெரிக்கா மிகவும் மௌனமான முறையில் பட்டியலிட்டுள்ளது. அமெரிக்காவி;ன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய வகையில் செயற்படுவோரை உள்ளடக்கி இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பாரா மொஹாமட் சோமாலிய பூர்வீகத்தைக் கொண்ட அல்பர்ட்டாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாரெக், கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.