2015ம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது . 2015ம் ஆண்டில் சிறிசேன – விக்ரமசிங்க அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஜெர்மன் தூதுவர் ஜோன் றோட் ( Jorn Rohde ) இதனைத் தெரிவித்துள்ளார். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசியல் முனைப்பு மிகவும் இன்றியமையாதது என சுட்டிக்காட்டியுள்ள அவர் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலிறுயுத்தியுள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.