188
யாழ்.மல்லாகம் பகுதியில் போத்தல்களில் பெற்றோல் விற்ற இருவருக்கு மல்லாகம் நீதிவான் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.மல்லாகம் பகுதியில் போத்தல்களில் பெற்றோலை அடைத்து விற்பனை செய்தார்கள் எனும் குற்றசாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இருவர் இன்று திங்கட்கிழமை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து நீதிவான் தீர்பாளித்தார்.
Spread the love