இந்தியாவிற்கு எண்ணெய் தாங்கிகள் வழங்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகத்தின் எண்ணெய் தாங்கிகள் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்படாது என பிரதமர் எழுத்து மூலம் உறுதியளித்துள்ளார். இந்திய நிறுவனத்திற்கு எண்ணெய்த் தாங்கிகளை வழங்கும் திட்டத்திற்கு பெற்றோலிய வளத் திணைக்கள தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு நேற்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தன.
இதனால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். நேற்றைய தினம் இரவு அலரி மாளிகையில் வைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்களை சந்தித்தனர். இதன் போது தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக பிரதமர் அறிவித்துள்ளதனைத் தொடர்ந்து தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.