காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகின்றது
தி.மு.க. அழைப்பு விடுத்த இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வணிகர் சங்கங்களும் முழு ஆதரவை அளித்துள்ளன. போக்குவரத்து தொழிலாளர்களும் முழு அடைப்பில் பங்கேற்கிறார்கள்.
முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து பேருந்துகளை ஓட்ட மாட்டோம் எனவும் வியாபாரிகள் கடைகளை அடைத்து முழு அடைப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளுக்காக சுமார் ஒரு இலட்சம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டள்ளதாகவும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போராட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினரையும், சுமார் 2000க்கு மேற்பட்ட போராட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.