மக்கள் பிரச்சினைகளை சம்பந்தன் மறந்து விட்டதாக வட மாகாண மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தம்மைப் போன்றவர்களை ஒன்றிணைத்து கூட்டமொன்றை நடத்தக் கூட சம்பந்தன் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது கணவர் காணாமல் போயுள்ளதாகவும் யுத்தத்தில் உறவுகளை இழந்துள்ளதாகவும், வாழ்வதற்கு போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறே ஏனையவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுத்து வரும் சில நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுக்கக் கூடாது என்ற போதிலும், மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏதேனும் தீர்வுத் திட்டம் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.