முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை தொடர்பான வழக்கு விரைந்து முடிக்க பேரறிவாளன் தரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த வழக்கை உடனடியாக விசாரிக்க இயலாது என அறிவித்துள்ளது.
கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்ற குறித்த 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு தமிழக சட்டசபையில் அறிவித்த போதும் அதனை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தமையினால் அவர்கள் விடுதலை செய்யப்படுவது தடுக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கும் நீண்ட நாட்களாக விசாரிக்கப்படாமலேயே உள்ளதனால் இந்த வழக்கினை உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை உடனே விசாரிக்க இயலாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் 7 பேரின் விடுதலை மீண்டும் தள்ளிப் போகும் நிலை உருவாகியுள்ளது.