சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் கருத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர இது தொடர்பிலான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் நடத்தாது சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இடமளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபை தேர்தல்களை அரசாங்கம் கூடிய விரைவில் நடத்த வேண்மெனவும், புதிய தேர்தல் முறையில் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ள அவர் எவருக்கும் தேவையான வகையில் தேர்தல்களை நடத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் முதலாவதாக புதிய அரசியல் சாசனம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என டொக்டர் ராஜித சேனாரட்ன கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.