ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொள்கைகள் காட்டிக் கொடுக்கப்படும் நிலைமையே தற்போது நாட்டில் நீடித்து வருகின்றது என மாத்தளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனக பண்டார தென்னக்கோனை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியமை முட்டாள்தனமான ஓர் செயற்பாடாகும் என குறிப்பிட்டுள்ள அவர் கட்சியின் தேவைக்காக இவ்வாறு பதவி நீக்கப்படவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்கு அமையவே இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் எவ்வித கொள்கைகளும் கோட்பாடுகளும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள மஹிந்த ராஜபக்ஸ சிலர் பழிவாங்குவதனை விடுவதாக இல்லை எனவும், ஜனக பண்டார தென்னக்கோன் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை ஒரு பெரிய பிழை எனவும் தெரிவித்துள்ளார்.