இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பான வாக்கெடுப்பு இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றில் இன்றையதினம் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு உறுப்பினர்களை சந்தித்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தெளிவூட்டியிருந்தார்.
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை வழங்க கூடாது என அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தீர்மானம் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.