ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் முடிவடைந்துள்ள நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 15ம் திகதி வழங்கப்படவுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக முறைப்பாடுகள் எழுந்ததனைர் தொடர்ந்து முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. தரப்பில் 2 வழக்குகளும், மத்திய அமுலாக்கத்துறை சார்பில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் மீது கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில் எழுத்துப்பூர்வமான அனைத்து தரப்பு வாதங்களும் நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பு ஒத்திpவைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜூலை 15ம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.