ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. தெற்காசிய பிராந்திய வலயத்தில் ஏற்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. மேலும் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய அரசியல் உறவுகள் காணப்படுவதாகத் உள்ளுதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.