ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் மிக முக்கியமான அமைச்சுப் பதவிகள், ராஜாங்க அமைச்சுப் பதவிகள் மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகிக்கும் நபர்களே இவ்வாறு இரகசிய சந்திப்பு நடத்தியுள்ளனர் எனவும் கடந்த இரண்டு வாரங்களாக இவ்வாறு மஹிந்தவுடன் இரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சுமார் 14 பேர் இவ்வாறு மஹிந்தவை இரகசியமாக சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் எனவும் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்களே இவ்வாறு மஹிந்தவை சந்தித்துள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
விஜயராம மாவத்தை அமைந்துள்ள வீட்டிலும், தங்காலை கார்ல்டன் வீட்டிலும் சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் என்ன விடயம் தொடர்பில் சந்திப்பு நடத்தப்பட்டது யார் பங்கேற்றார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.