120
பாகிஸ்தான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கூறி இந்திய மீனவர்கள் 19 பேரை அந்நாட்டு அதிகாரிகள் நேற்று கைதுசெய்துள்ளதுடன் அவர்களது 5 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதி மன்றத்தில் முன்னிலைப்படுப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த மாதம் இந்திய மீனவர்கள் சுமார் 100 பேர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதுடன் 19 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே தங்கள் கடல் எல்லையில் நுழைந்ததாக மீனவர்களை பரஸ்பரம் கைது செய்வது வழக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love