162
நீர்ப் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நீர்த் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ள அவர் நீர்ப் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்கள் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீரைப் பேணிப் பாதுகாக்க உரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியமானது என குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love