நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் எச்சரிக்கை காரணமாக அமைச்சரவை மாற்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்தின் போது தம்மை நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால், இந்த அரசாங்கத்தின் இரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக ரவி கருணாநாயக்க பிரதமரை எச்சரித்துள்ளார் எனவும் அமைச்சுப் பதவியை துறந்து சாதாரண ஓர் பாராளுமன்ற உறுப்பினராக பின்வரிசையில் அமர்ந்து கொள்வதாகவும் ரவி கருணநாயாக்க எச்சரிக்கை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளதனைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி திட்டவட்டமாக பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.