2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை பிற்பகல் 3மணிக்கு கிளிநொச்சியில் உள்ள பாரதி ஸ்டார் விடுதியில் இடம்பெறுகின்றது.
இந்த நிகழ்வில் வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார். இதில் தராகியும் இலங்கையின் பூகோள அரசியலும் என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைள் இணைப்பாளர் கலாநிதி எஸ். ரகுராம் நிகழ்த்துகிறார்.
கூட்டமைப்பு உருவாக்கத்தில் சிவராம் என்ற தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் சிவராமின் கனவு என்ற தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் ராதையனும் நானும் சிவராமும் என்ற தலைப்பில் மூத்த ஊடவியலாளர் பொ. மாணிக்கவாசகமும் உரையாற்றுகின்றனர்.
இதன்போது தராகி சிவராம் ஞாபகார்த்த விசேட விருது மறைந்த கேலிச் சித்திரக் கலைஞர் அஸ்வின் சுதர்சனுக்கு வழக்கப்படுவதுடன் ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது.