வாக்காளர்களுக்கு வாக்கு போட பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் அடுத்த 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வருமாறு இந்திய மத்திய சட்ட அமைச்சுக்கு தேர்தல் ஆணையகம் கடிதம் எழுதி உள்ளது.
இந்தியா முழுவதும் வாக்குக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் அதிகரித்து விட்டதனை சுட்டிக்காட்டிய தேர்தல் ஆணையகம் இதனை தடுப்பதற்கான சட்ட விதிமுறைகளை கடுமையாக்கவேண்டும் என கூறியுள்ளது.
வுhக்குக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையகத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையிலேயே சட்ட திருத்தம் குறித்து மத்திய சட்ட அமைச்சுக்கு தேர்தல் ஆணையகம் கடிதம் எழுதியுள்ளது.
மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து அடுத்த 6 வருடங்களுக்கு அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை கொண்டு வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.