அமெரிக்க ஜனாதிபதி பணி மிகவும் சவாலாக உள்ளதாகவும் பழைய வாழ்க்கையையே விரும்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 20ம் திகதி அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப் பதவியேற்ற 100-வது நாள் விழாவை தனது அலுவலகத்தில் கொண்டாடிய பின்னர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பதவியானது மிகவும் எளிமையாக இருக்கும் என்றே தான் நினைத்ததாகவும் ஆனால் அந்தப் பணி எவ்வளவு சவாலானது என்பதை இப்போது உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கார் ஓட்டுவதை மிகவும் விரும்புவதாகவும் தற்போது தான் நினைத்தால் கூட கார் ஓட்ட முடியாது எனவும் தனக்கு பிடித்தவற்றை, தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளர்h.
மேலும் 24 மணி நேர பாதுகாப்பு காரணமாக பட்டுப்புழு கூட்டில் இருப்பதுபோல உணர்வதாகவும் தனது பழைய வாழ்க்கையையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுடன் பிரச்சினைக்கு ராஜ்ஜிய ரீதியில் தீர்வு காணலாம் என்று முயற்சிக்கின்ற போதிலும்; அது மிகப்பெரும் சவாலாக உள்ளது எனவும் 27 வயதான வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கு இளம் வயது என்பதால் நிதானம், பொறுமை, அரசியல் ஞானம் இல்லை எனவும் அவர் புத்திசாலியாக செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மிகவும் கொடூரமானவர்கள் எனவும் அந்த அமைப்பு வேரோடு அழிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.