இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் பசுக்களைக் கடத்தியதாகக் தெரிவித்து இரு இளைஞர்கள் உள்ளூர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். அபு ஹானிஃபா மற்றும் ரியாஸுர்தீன் அலி என்ற இரு இளைஞர்களும் 20 வயதுகளின் ஆரம்பத்தில் இருந்தவர்கள் எனவும் அவர்களை ஒரு கும்பல் அடித்தே கொன்றுள்ளது எனவும் பசுத் திருட்டு என்று கூறி, அஸாமில் இளைஞர்கள் கொல்லப்பட்டது இதுவே முதல்முறை எனவும் காவல்துறையினர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்கப்பட்ட இரு இளைஞர்களும் வைத்தியாலைக்கு எடுத்துச்செப்பட்ட போதிலும் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அஸாமில், மாட்டிறைச்சிக்கு ஏதுவான பசு என்ற சான்றிதழ் இல்லாது மாட்டிறைச்சியை விற்பதற்கு த் தடை உள்ளதாகவும் குறிப்பிட்ட சில முஸ்லிம் பண்டிகைகளின்போது மட்டும் மாட்டிறைச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது