இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச வெசாக் தின நிகழ்வுகள் இந்த மாதம் 11 மற்றும் 12ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இந்நிகழ்வுகளில் பங்பேற்பதற்காக நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நரேந்திர மோடி இலங்கை பயணத்தின் போது திருகோணமலை எண்ணெய்த் தாங்கி விவகாரம் குறித்து பேச உள்ளதாகவும் எனவே இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் எனவும் ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
காலி முகத் திடலில் நேற்றைய தினம் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கம் நாட்டை இந்தியாவிற்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.