129
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பொருட்களை ஏற்றிச் புகையிரதம் மோதியதில் தண்டவாளத்தில் நடந்து சென்ற 9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு புகையிரதத்தில் இருந்து இறங்கிய சிலர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது தண்டவாளத்தில் வந்த ஒரு சரக்கு புகையிரதம் அவர்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளதாகவும் படுகாயமடைந்த 6 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 2பேர் உயிரிழந்ததாகவும் இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
Spread the love