இந்தியா துருக்கிக்கிடையில் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன துருக்கி ஜனாதிபதி ரையிப் எர்டொகன் 2 நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடியை டெல்லியில்; நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் நிலவும் இருதரப்பு உறவுகளை மறு ஆய்வு செய்தனர். தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது மற்றும் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் உறுப்பினராக இணைதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதித்துள்ளதுடன் இரு நாடுகளுக்கிடையே, 3 ஒப்பந்தங் களும்; கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அத்துடன் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவின் முயற்சிக்கு துருக்கி எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் எர்டொகன் தெரிவித்துள்ளர்.