268
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவிற்கு பயணம் செய்ய அனுமதிக்குமாறு உதய கம்மன்பில கோரியிருந்த நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் மே மாதம் 18 முதல் 24ம் திகதி வரையில் அமெரிக்காவில் தங்கியிருக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2லட்சம் ரூபா பிணையின் அடிப்படையில் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Spread the love