ஐக்கிய தேசியக் கட்சியுடன் எல்லா காலங்களிலும் இணைந்து செயற்பட போவதில்லை என அமைச்சர் எஸ்;.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எல்லா காலங்களிலும் இணைந்திருப்பதானது சுதந்திரக் கட்சிக்கோ, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது நாட்டுக்கோ நன்மையளிக்காது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த விடயம் பற்றி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பூரண தெளிவு உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சில கொள்கைகள் தொடர்பில் சுதந்திரக் கட்சிக்கு இணக்கமில்லை எனவும், சுதந்திரக் கட்சியின் சில கொள்கைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொடர்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமை நீடித்தால் அது அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் ஓர் நோக்கத்திற்காக இணைந்து செயற்படுவதாகவும் அந்த நோக்கம் பாரியளவில் அடையப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.