முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்திற்கு 883 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக சஜின் வாஸ் குணவர்தன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2007-2008ம் ஆண்டு காலப் பகுதியில் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படும் வகையில் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.