இலங்கை பிரதான செய்திகள்

யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை


யாழ்ப்பாணம் சுன்னாக பொலிஸாரினால்  சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞர்  சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்தமை தொடர்பான வழக்கில் அப்போதைய சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார உள்ளிட்ட 6 பொலிஸாரை குற்றவாளியாக கண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீரப்பளித்துள்ளார்.

அதேவேளை குறித்த வழக்கின் 3 ஆவது எதிரியான தேவதயாளன் மற்றும் 8 ஆம் எதிரியான லலித் ஆகியோர் குற்றமற்றவர்கள் என மேல் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். குறித்த வழக்கு இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்பாக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி அவ்வாறு தீர்ப்பளித்தார் .

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.