முத்தலாக் வழக்கு விசாரணைகளில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அமைச்சருமான சல்மான்குர்ஷித்தை நடுநிலை அறிவுரையாளராக நியமிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முத்தலாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எந்த அளவிற்கு தலையிட முடியும், அதற்கான அரசியலமைப்புச் சட்ட வரம்புகள் எந்த அளவுக்கு உள்ளன என்பது குறித்து குர்ஷித் நீதிமன்றத்துக்கு உதவுவார் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சல்மான் குர்ஷித் தனக்கான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
முத்தலாக் விவகாரம் தொடர்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் குறித்த வழக்குகளை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றத்துக்கு எந்த அளவுக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்தே பெரும்பாலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு மே 11ம் திகதி முத்தலாக் குறித்து தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
00