ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கியப் படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் ஐக்கியத்தை நிலைநாட்டுவதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன் கட்சியை ஐக்கியப்படுத்தும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான உறுப்பினர்கள் கட்சியை ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டு வருவதாகவும் ஒரு சிலர் மட்டுமே பிளவடையச் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலி முகத் திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.