ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் பறிமுமுதல் செய்யப்பட்ட 89 கோடி ரூபாவுக்கான ஆவணங்கள் தொடர்பாக அழைப்பாணை அனுப்பிய நிலையில் அவரது மனைவி ரம்யா இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகளில் மேற்கொண்ட சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் மூவரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்தநிலையிலேயே விஜயபாஸ்கரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த அவரது மனைவி ரம்யா முன்னிலையாகியுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.