177
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்க மறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. பிள்ளையான் தொடர்புடைய வழக்கு இன்றைய தினம் நீதிமன்றில் மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் ஜுலை மாதம் 25ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் ஒத்திவைத்துள்ளார்.
2015ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையன்று அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love